எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடாத்தப்படவுள்ள இலங்கையின் 15 வது குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் பொருட்டு தொகைமதிப்பு ஆணையாளர், பிரதித் தொகைமதிப்பு ஆணையாளர்கள், மற்றும் உதவித் தொகைமதிப்பு ஆணையாளர்களுக்கான விளக்கச் செயலமர்வு ஒன்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் குடிசன வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024 நடவடிக்கையின் மாகாண இணைப்பாளர் திருமதி உதயா மகேஸ்வரன் (பணிப்பாளர்), மாவட்ட இணைப்பாளர் திருA.K.D.C.N.S.கருணாரத்ன (சிரேஷ்ட புள்ளிவிபரவியலாளர்),மாவட்டப் புள்ளிவிபரப்பிரிவு தலைவர். திரு ஏ.யூட் நேசராஜா (புள்ளிவிபரவியலாளர்) மற்றும் பிரதேசத்திற்குப் பொறுப்பான புள்ளிவிபர உத்தியோகத்தர்களது பங்குபற்றுதலுடக் மாவட்டச் செயலாளர் திரு. பி. ஏ. சரத் சந்திர தலைமையில் 01.06.2023 அன்று வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.









